অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

BSNL's Indigenous 4G Network Expands with Over 50,000 Sites, Boosting India's Digital Connectivity

BSNL's Indigenous 4G Network Expands with Over 50,000 Sites, Boosting India's Digital Connectivity

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முயற்சியின் கீழ் ஒரு மைல்கல் நடவடிக்கையாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு 4 ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு இலக்குகளை கணிசமாக மேம்படுத்துகிறது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இது மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் தொலைத் தொடர்பு இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வலிமையை இது காட்டுகிறது. முற்றிலும் இந்திய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல்-லின் 4 ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது.

2024 அக்டோபர் 29 நிலவரப்படி, பிஎஸ்என்எல் 50,000-க்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000 க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன.

 கடந்த மூன்று மாதங்களில் 25,000 க்கும் மேற்பட்ட புதிய 4 ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் இந்தியா முழுவதையும் தகவல் தொடர்பு மூலம் இணைப்பதற்கான பிஎஸ்என்எல்-லின் அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த செயல்பாடாக உள்ளது.



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate